எனக்கேவா என்று கூறி... காதலனை கதறவிட்ட காதலி

ஆட்டோவில் கடத்திகொண்டுபோய் காதலி கதறவிட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனக்கேவா என்று கூறி... காதலனை கதறவிட்ட காதலி
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சேர்ந்த பாலு (வயது 32), விவாகரத்துக்கு பிறகு அதே பகுதியில் பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததும், பாலுவை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன், ஐடி நிறுவனத்திற்கு சென்ற பாலு, அந்த பெண் சிகரெட் பிடித்ததை பார்த்துள்ளார். இதை பாலு கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண் தனக்கு அறிமுகமான சிலரின் உதவியுடன் பாலுவை ராயப்பேட்டை பொன்னியம்மன் கோவில் தெருவுக்கு வர வைத்து, ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கியதாகவும், பாலுவின் செல்போன் மற்றும் 2 சவரன் தங்க நகைகளை பறித்து கொண்டு அந்த நபர்கள் தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாலு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் காதலி சிகரெட் பிடித்ததை கண்டித்ததால், காதலன் ஆட்டோவில் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டோவில் கடத்திகொண்டுபோய் காதலி கதறவிட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com