வீடு, வீடாக விண்ணப்பம் சரிபார்ப்பு பணி இன்று முதல் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வீடு, வீடாக விண்ணப்பம் சரிபார்ப்பு பணி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.
வீடு, வீடாக விண்ணப்பம் சரிபார்ப்பு பணி இன்று முதல் தொடக்கம்
Published on

விண்ணப்பங்கள் பதிவு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி சமீபத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, இலுப்பூர், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய தாலுகாகளில் முதல் கட்டமாக விண்ணப்பங்கள் வீடு, வீடாக வினியோகிக்கப்பட்டு முகாம்கள் மூலம் பதிவுகள் நடைபெற்றது.

தொடர்ந்து 2-ம் கட்டமாக ஆவுடையார்கோவில், கறம்பக்குடி, குளத்தூர், திருமயம், விராலிமலை ஆகிய தாலுகாவில் நடைபெற்றது. இந்த முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்கள் கடந்த 18, 19, 20-ந் தேதிகளில் நடைபெற்றது.

சரிபார்ப்பு பணி இன்று முதல் தொடக்கம்

இந்த நிலையில் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் ஒட்டுமொத்தமாக சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையில் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் வீடு, வீடாக சரிபார்ப்பு பணி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்காக அலுவலர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த பணியை மேற்கொள்வார்கள் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com