மணிப்பூர் சம்பவத்தில் மோடியின் இரட்டை என்ஜின் தோல்வி அடைந்து உள்ளது - இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர்

மணிப்பூர் சம்பவத்தில் மோடியின் இரட்டை என்ஜின் தோல்வி அடைந்து உள்ளதாக டி.ராஜா தெரிவித்தார்.
மணிப்பூர் சம்பவத்தில் மோடியின் இரட்டை என்ஜின் தோல்வி அடைந்து உள்ளது - இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர்
Published on

மணிப்பூர் கலவரம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

மணிப்பூர் கொழுந்துவிட்டு எரிகிறது. பல நாட்களாக வன்முறை தொடர்ந்து கொண்டு உள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டில் அகதியாக மாற்றப்பட்டு உள்ளனர். பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு இழக்கப்படுகின்ற வன்முறைகள் பற்றி சொல்ல முடியாத வார்த்தைகள் வகையில் கோபம் ஏற்படுகின்றது. மணிப்பூர் சம்பவம் குறித்து எல்லா கட்சிகளும் பேசியபோது பிரதமர் மோடி அமைதி காத்து வந்தார். ஒரு வீடியோ வெளியான பின்னர்தான் வாய் திறந்து உள்ளார்.

இரட்டை என்ஜின் தோல்வி

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என மோடி சொல்கிறார். பாரத தாயின் மக்கள்தான் மணிப்பூர் பெண்கள். மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் நடக்கிறது. மணிப்பூர் சம்பவத்தில் மோடியின் இரட்டை என்ஜின் அரசு தோல்வி கண்டு உள்ளது.

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதில் மோடி, அமித்ஷா பதில் என்ன?. மணிப்பூரில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோருகின்றன. நாடாளுமன்றத்தில் பிரதமர் வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் சம்பவம் எதிரொலிக்கும். மக்களுக்கு நல்லது செய்பவர்கள்தான் ஆட்சியில் அமர வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com