இரு மடங்கு கட்டண உயர்வு... பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் ஆம்னி பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இரு மடங்கு கட்டண உயர்வு... பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் ஆம்னி பஸ்கள்
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

அதன்படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3 ஆயிரத்து 200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதே போல், திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக 3 ஆயிரத்து 950 ரூபாயும், மதுரைக்கு 3 ஆயிரத்து100 வரையும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com