

நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்கு நேற்று இரவு பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்குள்ள டீக்கடையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். மேலும், டீக்கடை மீது பெட்ரோல் குண்டும் வீசினர்.
இந்த கும்பல் சரமாரியாக வெட்டியதில் ஜான் என்ற மாற்றுத்திறனாளி, வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நெல்லை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த இரட்டை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த இரட்டை படுகொலையில் 7 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எஞ்சியோரை போலீசார் தேடி வருகின்றனர்.