தவெக அரசு 3 மாதமாவது தாங்குமா என சந்தேகம்: மு.க.ஸ்டாலின்

ஆதிதிராவிடர் மக்களுக்கு திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தவெக அரசு 3 மாதமாவது தாங்குமா என சந்தேகம்: மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். மேலும் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியம் ஆகினர்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

லட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக தங்களை இணைத்துக்கொள்ள வருகை தந்திருக்கிற அனைவரையும், கழகத்தின் முதன்மைத் தொண்டனாக மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். கொள்கைக்காக உறுதியோடு உழைக்கக்கூடிய செயல்வீரர்தான் பனையூர் பாபு. அதற்கு அவரது அரசியல் பயணமே சாட்சியாக அமைந்திருக்கிறது.

ஆதிதிராவிடர் மக்களுக்கு திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும் போதுதான் வேலை அதிகமாக இருக்கும். இப்படியான சூழலில் உழைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று துணையாக வந்து சேர்ந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் 6 மாதங்கள் இல்லை, 5 மாதங்கள் இல்லை, 4 மாதங்கள் இல்லை, 3 மாதங்களாவது தாங்குமா? என்ற கேள்வியுடன்தான் த.வெ.க ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. தவெக ஆட்சி பொறுப்பேற்றபோது நான் சொன்னேன், 6 மாதங்களுக்கு இத பத்தி பேசப்போறது இல்லை என்று.. ஆனால் 6 மாதங்களுக்கு முன் பேச வேண்டிய சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com