பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமைபடுத்திய கணவர் உள்பட 3 பெர்மிது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
Published on

மதுரை தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல்சத்தார் மகன் சுல்தான் பாஷா. இவருக்கும் தேனி பாரஸ்ட்ரோடு 4-வது தெருவை சேர்ந்த முகமது பாஷா மகள் ஹாஜிராபானு (வயது28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஹாஜிராபானு பி.எட். பட்டதாரி. அவருடைய கணவர் மளிகை கடை நடத்தி வருகிறார். திருமணத்தின் போது ஹாஜிரா பானுவின் குடும்பத்தினர் 40 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். ஆனால், கடையை விரிவாக்கம் செய்வதற்ககு கூடுதல் வரதட்சணை கேட்டு சுல்தான் பாஷா மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் அவருடைய கணவர் சுல்தான் பாஷா, மாமனார் அப்துல்சத்தார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com