பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 12 பேர் மீது வழக்கு

தேனி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 12 பேர் மீது வழக்கு
Published on

தேனி அருகே உள்ள சுக்குவாடன்பட்டியை சேர்ந்த கர்ணன் மகன் ஆனந்தரவி (வயது 36). இவரது மனைவி அனுஷா (25). இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனந்தரவி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரும், அவருடைய குடும்பத்தினரும் அனுஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அனுஷா புகார் செய்தார். அதன்பேரில் ஆனந்தரவி, அவருடைய அண்ணன் ஆனந்தராஜ் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com