பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு

தேனி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
Published on

தேனி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் ராஜபிரபு (வயது 27). இவரது மனைவி செண்பகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் நடந்தது. செண்பகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில், ராஜபிரபுவின் குடும்பத்தினர் செண்பகாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில், அவருடைய கணவர் ராஜபிரபு, மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் அமுதா உள்பட 7 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com