இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

இந்தியாவில் 18 முதல் 59 வயதுப் பிரிவினருக்கு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 18 முதல் 59 வயதுப் பிரிவினருக்கு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். இப்போது எனது யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்தி இந்த வயதுப் பிரிவினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ந்தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com