வாசுதேவநல்லூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்நினைவு தினம்

வாசுதேவநல்லூரில் உள்ள சிறப்பு பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வாசுதேவநல்லூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்நினைவு தினம்
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் மூலம் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கு.தவமணி, தலைமை ஆசிரியர் த.சங்கர சுப்பிரமணியன், சிறப்பு ஆசிரியர்கள் ஆ.சாந்தி, ஹெலன், இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் செல்வி, மகேஸ்வரி, முத்துலட்சுமி, இயன்முறை மருத்துவர் சா.புனிதா, கவிதா மற்றும் பள்ளியின் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com