டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு பிறந்த நாள் விழா

அரக்கோணம் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு பிறந்த நாள் விழா
Published on

அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிறுவனரும், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் தலைவருமான டாக்டர். வி.கெங்குசாமி நாயுடுவின் 93-வது பிறந்த நாள் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர். வி.கெங்குசாமி நாயுடுவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதனை தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் சேர்மன் டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சி.ஜி.என்.எத்திராஜுலு நாயுடு, தாளாளர் என்.தனபால் நாயுடு, செயலாளர் ஜி.டி.என்.அசோகன், பொருளாளர் டி.ஜி.கே.சரவணன், இணை செயலாளர்கள் கே.மோகன் ரங்கசாமி நாயுடு, டி.எஸ்.முரளி நாயுடு மற்றும் உறுப்பினர்கள் ஆர்.பி.ரவிக்குமார் நாயுடு, ஆர்.மகேஷ் நாயுடு, ஜி.கே.பாபுஜி நாயுடு, ஏ.வி.ரகு நாயுடு, எம்.பாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் டாக்டர். வனிதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com