வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

தலைஞாயிறு ஒன்றியத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
Published on

வாய்மேடு:

குறுவை பாசனத்திற்காக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து தலைஞாயிறு பொதுப்பணித்துறை வெண்ணாறு பிரிவு அலுவலகத்தின் மூலம் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலைஞாயிறு ஒன்றியம் பகுதியில் உள்ள பழவனாறு, வெண்மணச்சேரி வடபாதி வடிகால், பொன்னேரி வாய்க்கால், மேட்டுப்பள்ள வாய்க்கால், ஈசனூர் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் ரூ.63 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளதால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தலைஞாயிறு பகுதியில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com