முறைகேடுகளை தடுக்க ரேஷன் அட்டையில் அதிரடி மாற்றம்

இறந்த நபர்களின் ஆதார் எண் விவரங்களை பெற்று அதனை அறிக்கையாக அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தடுக்க ரேஷன் அட்டையில் அதிரடி மாற்றம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் இறந்த நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில் ரேசன் கார்டுகளில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகை பதிவினை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தர விட்டுள்ளது.

ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. வேலை காரணமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்களும் வரும் 25ம் தேதிக்குள் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம்.

மேலும் இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை, வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரேஷன் கார்டில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நீக்கப்படாமல் உள்ளது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ரேஷன் அட்டைகளில் பெயர்மாறியுள்ளதால் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. இதை தடுக்க ஆதார் எண் இணைக்கவும், விரல் ரேகையை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலர்களுக்கு உத்தரவு இந்நிலையில் இறந்த நபர்களின் ஆதார் எண் விவரங்களை பெற்று அதனை அறிக்கையாக அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட் டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com