திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நெல்லை:

திராவிட தமிழர் கட்சியினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பேட்டையில் நடந்த சேதுபதி கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. திராவிட தமிழர் கட்சி மாநில பொதுச்செயலாளர் கதிரவன், அமைப்புச்செயலாளர் சங்கர், கலை இலக்கிய பகுத்தறிவு மற்றும் பண்பாட்டு மாநில செயலாளர் ஒண்டிவீரன் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com