‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு கோரும் அவசர சட்டத்தை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்கவேண்டும் என வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த பதாகைகளை கையில் பிடித்தபடியும், நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், பேராசிரியர் மு.நாகநாதன், த.க.நடராஜன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோரும் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com