திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொய்வின்றி தொடரும்: உதயநிதி

திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொய்வின்றி தொடரும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து ஒவ்வொரு குடும்பத்தின் கருத்துகளைப் பெறவும், பொதுமக்களின் கனவுகள் மற்றும் எதிர்கால தேவைகளைக் கண்டறியவும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 'உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இருந்து நாம் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டோம்.
'மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள்' என்ற பேரறிஞர் அண்ணா வழியில், தமிழ்நாட்டின் 1.91 கோடி குடும்பங்களின் வசிப்பிடங்களுக்கே சென்று - பயன்பெற்ற திட்டங்களின் விவரங்கள், அவர்களின் கனவுகள் - தேவைகளைக் கேட்டு செயலியில் பதிவேற்ற 50,000 தன்னார்வலர்கள் புறப்படுகின்றனர்.
இந்த தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நமது சகோதரிகள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த சகோதரிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி மகிழ்ந்தோம்.
மக்களின் கனவுகளை பிரதிபலிக்கும் திட்டங்களே, சமூக வளர்ச்சிக்கான உந்துசக்தி. அதை நம் திராவிட மாடல் அரசு என்றும் தொய்வின்றி தொடரும்! என தெரிவித்துள்ளார்.
.






