மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி நடந்தது.
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி
Published on

காரைக்குடி, 

மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை, மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றம் சார்பில் உலக ஓவிய தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கு இலவச ஓவிய பயிற்சி முகாம், 17 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இளையோர் மாவட்ட கலை போட்டிகள் உள்ளிட்டவைகள் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. இதில் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஓவிய பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், பேப்பர், பனை மரம் மற்றும் வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்களை மாணவ-மாணவிகள் வரைந்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வமாக ஓவியங்களை வரைந்தனர். அவை காட்சிப் படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இதேபோல் தமிழக கலாசார கலை போட்டிகளும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com