தொடக்கப்பள்ளி மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்கள்

காரைக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தில் மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
Published on

காரைக்குடி

காரைக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தில் மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நவீன வசதியுடன் பள்ளி கட்டிடம்

காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியனுக்குட்பட்டது தி.சூரக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நங்கப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே இயங்கி வந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமான நிலையில் இருந்ததால் அந்த பள்ளிக்கட்டிடம் அகற்றப்பட்டு புதிய பள்ளிக்கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதையடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முழு உதவியோடு இந்த பள்ளிக்கட்டிடம் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடத்துடன் கட்டப்பட்டு வருகிறது.

பொதுவாக தனியார் தொடக்கப்பள்ளியில் பெற்றோர் மற்றும் பள்ளிக்குழந்தைகளை கவரும் வகையில் அந்த பள்ளிக்கட்டிடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கரும்பலகைகள், ஸ்மார்ட் வகுப்புகள், பல்வேறு விளையாட்டு உபகரண பொருட்கள், அழகிய வண்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.

காரைக்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தில் மாணவர்களை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அதே போல் இந்த பள்ளிக்கட்டிடமானது காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறைகள் மற்றும் அதற்கு பின்புறம் பகுதியில் நவீன சமையல் கூடம் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளி கட்டிடத்தின் சுவர்கள், வகுப்பறைகள் முழுவதும் தமிழ்நாடு மற்றும் இந்திய வரைபடம், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள், ரோமன் எழுத்துக்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்கள், மாதம் மற்றும் வார நாட்கள், பருவ கால முறைகள், மனிதனின் உள் உறுப்புகளின் தகவல்கள், நிலத்தடி நீர்மட்டம், தண்ணீர் சேமிப்பின் அவசியம், தட்ப வெப்ப பருவ நிலை, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய வரைபடங்கள் வரையப்பட்டு அவை பள்ளிக்குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்த அரசு பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என தெரிகிறது. இதேபோல் இந்த ஊராட்சிக்குட்பட்ட ஆவுடைப்பொய்கை கிராமத்திலும் நவீன வசதிகள் மற்றும் பல்வேறு தகவல்களை வரைப்படங்களாக வரையப்பட்டு புதிய அங்கன்வாடி கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த இரு கட்டிடங்களும் கட்டப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் விரைவில் திறப்பு விழாவிற்காக தயாராக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com