பொக்லைன் எந்திரம் மூலம் அரசூர் மலட்டாற்றில் தூர்வாரும் பணி

பொக்லைன் எந்திரம் மூலம் அரசூர் மலட்டாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்றது.
பொக்லைன் எந்திரம் மூலம் அரசூர் மலட்டாற்றில் தூர்வாரும் பணி
Published on

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் மலட்டாறு அமைந்துள்ளது. இதன் மூலம் இருவேல்பட்டு, காரப்பட்டு, மேல்தணியாலம்பட்டு, டி.குமாரமங்கலம், சேமங்கலம், ரெட்டிக்குப்பம், ஒறையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஆனால், ஆற்றில் குவிந்துள்ள மணல்மேடுகளால் தண்ணீர் சீராக செல்லாமல் தடைப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஒன்றிய கவுன்சிலர் ஆடிட்டர் சுகந்தி ராஜீவ்காந்தி, பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றை தூர்வாரி நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து தண்ணீர் சீராக சென்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com