கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு...உயர்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை கடிதம் எழுதி உள்ளது.
கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு...உயர்கல்வித்துறை உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.

பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.

பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தெழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com