வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு...!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உத்தரவு...!
Published on

சென்னை, 

தமிழக மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வரும் போது சரியான ஆடை கட்டுப்பாட்டுடன் வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணியக் கூடாது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com