சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணிகள் - நாளை முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணிகள் - நாளை முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது
Published on

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பகுதி அலுவலகம்-1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் 5-ந்தேதி (நாளை) முதல் 15-ந்தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகள் அகற்றும் பணி நடக்க இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com