ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனின் 2 சிறுநீரகங்களும் செயலிழப்பு..!

கன்னியாகுமரி அருகே ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனின் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.
ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனின் 2 சிறுநீரகங்களும் செயலிழப்பு..!
Published on

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவனின் 2 கிட்னிகளும் பாதிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில் என்பவரது 11 வயது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய அந்த சிறுவனுக்கு, அப்பள்ளியில் படித்த மற்றொரு மாணவர் குளிர்பானம் கொடுத்ததாக தெரிகிறது.

அந்த குளிர் பானத்தை குடித்த சிறுவனுக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சிறுவனுக்கு வாயில் புண் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சோதனை செய்ததில் மாணவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com