புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது - அமைச்சர் உதயகுமார்

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது - அமைச்சர் உதயகுமார்
Published on

சென்னை

அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது.புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது. மழையால் மீட்பு பணிகள் பாதிக்காதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைக்கு 465 முகாம்கள், 535 மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் உள்ளன. கஜா புயலால் 2,17,935 மரங்கள் சாய்ந்துள்ளன, 91,960 மரங்கள் அகற்றம்.

மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். துண்டிக்கப்பட்ட 58 லட்சம் மின் இணைப்புகளில், 38 லட்சம் இணைப்புகள் சீரானது என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com