

சென்னை,
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2026-27-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.
நுகர்வோர்கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். காசோலை, வரைவோலை, இ-சேவை மையங்கள், யு.பி.ஐ., கியூ-ஆர் குறியீடு, பி.ஓ.எஸ். மற்றும் ஐ.பி.ஓ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.