சென்னையில் 7, 8ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை போரூர் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் தூண் அருகில் குடிநீர் பரிமாற்ற குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணிகள் 7ம் தேதி இரவு முதல் 8ம் தேதி இரவு வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையில் 7, 8ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Published on

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை போரூர் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் தூண் அருகில் குடிநீர் பரிமாற்ற குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணிகள் காரணமாக வருகிற 7ம் தேதி இரவு 11 மணி முதல் 8ம் தேதி இரவு 11 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதனால் மயிலாப்பூர், நந்தனம், கே.கே.நகர், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக்நகர், வளசரவாக்கம், ஆலந்தூர், சின்ன போரூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கோட்டூர்புரம், இந்திராநகர், பெசன்ட்நகர், திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com