திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து - சென்னை குடிநீர் வாரியம் தகவல்

பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
Published on

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரத்தில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் நாளை (09.02.2026) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 12 மணி நேரம் திருவெற்றியூர் குடிநீர் பகிர்மான நிலையம் மற்றும் மாதவரம் குடிநீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எர்ணாவூர், ராஜா சண்முக நகர், கார்கில் நகர் மற்றும் மணலி மண்டலத்திற்கு உட்பட்ட மணலி புதுநகர், நாப்பாளையம், சடையான்குப்பம், ஆண்டார்குப்பம், துவாரகா நகர், மணலி மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com