தில்லைநகர், எடமலைப்பட்டிபுதூர் பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தில்லைநகர், எடமலைப்பட்டிபுதூர் பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தில்லைநகர், எடமலைப்பட்டிபுதூர் பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
Published on

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 13-ந்தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள்(புதன்கிழமை) குடிநீர் வினியோகம் இருக்காது. இதேபோல் அய்யாளம்மன் படித்துறை, கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ்நகர், பாரி நகர், பழைய எல்லைக்குடி, காவேரிநகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர், கே.கே. கோட்டை மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் இருக்காது. வருகிற 15-ந்தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com