பெண்ணிடம் ஆபாச செய்கை காண்பித்த டிரைவர் கைது: சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் நடவடிக்கை

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு டிரைவர், 29 வயது பெண்ணிடம் அவரது ஆடையை வர்ணித்து, ஆபாச செய்கைகள் காண்பித்துள்ளார்.
டிரைவர் கைது
Published on

சென்னை,

பெண்ணிடம் ஆபாச செய்கை:

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் அதே பகுதியில் டீ மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆடையை வர்ணித்து, ஆபாச செய்கைகள் காண்பித்துள்ளார்.

விரைந்து வந்த சிங்கப்பெண் அதிரடிப்படை:

இதுகுறித்து அந்த பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்தனர்.

டிரைவர் கைது:

கிருஷ்ணமூர்த்தியை பிடித்து ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com