அந்தரங்க லீலைகளை கண்டுபிடித்த மனைவி; முதலிரவு வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டிய டிரைவர் கைது

கணவரின் செல்போனை பார்த்தபோது பல பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்துதது தெரிய வந்தது.
மிரட்டிய டிரைவர் கைது
Published on: 

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்(வயது31). டிரைவரான இவருக்கும். காரைக்கால் பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி கணவன்-மனை விக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அருண் தாக்கியதில் காயம் அடைந்த அவரது மனைவி சீர்காழி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அருணின் மனைவி ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் நடவடிக்கைகள் மற் றும் செயல்பாடுகள் சரியில்லை. அவரது செல்போனை பார்த்தபோது பல பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். அவற்றை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

மேலும் எங்களுக்கு நடந்த முதலிரவையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு இணையதளத் தில் வெளியிடுவேன் என மிரட்டினார் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து. அருணிடம் விசாரிக்க மங்கைமடம் சென்றனர். போலீசார் தன்னிடம் விசாரணை நடத்த வரு வதை அறிந்த அருண், விஷ இலையை அரைத்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்யாமல் திரும்பி வந்தனர். இந்த நிலையில் அந்த பெண், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேகாபிரியாவிடம் தனது கணவர் குறித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த அருணை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரது செல்போனை கைப்பற்றி அதில் உள்ள வீடியோ காட்சிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com