மயங்கி விழுந்து டிரைவர் சாவு

மயங்கி விழுந்து டிரைவர் சாவு
மயங்கி விழுந்து டிரைவர் சாவு
Published on

தஞ்சையை அடுத்த சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மரியசெல்வராஜ். (வயது 50). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த மரிய செல்வராஜ் திருச்சி செல்லும் பஸ்சை எடுத்து கொண்டு புதிய பஸ் நிலையத்தில் திருச்சி மார்க்கத்தில் நிறுத்திவிட்டு தண்ணீர் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அதே இடத்தில் மயங்கிய நிலையில் கீழே விழுந்தார். இதை பார்த்த சிலர் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com