சின்னசேலம் அருகேவாகனம் மோதி டிரைவர் பலி

சின்னசேலம் அருகே வாகனம் மோதி டிரைவர் பலியானார்.
சின்னசேலம் அருகேவாகனம் மோதி டிரைவர் பலி
Published on

சின்னசேலம் அடுத்த வி.அலம்பலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பெரியசாமி (வயது 34). நெல் அறுவடை எந்திர டிரைவரான இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பெரியசாமி நேற்று முன்தினம் இரவு அலம்பலத்தில் இருந்து நயினார்பாளையம் நோக்கி சேலம்- விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பெரியசாமி மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com