டிரைவர் தற்கொலை

மனைவி கோபித்து சென்றதால், தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர் தற்கொலை
Published on

வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் ஊராட்சி தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). சரக்கு வாகன டிரைவர். அவருடைய மனைவி வினோதினி. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் வினோதினி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com