வெப்படை அருகே லாரி டிரைவர் தற்கொலை

வெப்படை அருகே லாரி டிரைவர் தற்கொலை
Published on

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் வெப்படை அருகே ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). லாரி டிரைவர். இவரது மனைவி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்துக்கொண்டு தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரபாகரனுக்கும், அவரது தாயார் கலாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரபாகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த கலா கதறி அழுதார். பின்னர் அவர் வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வெப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com