டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் - சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு


தினத்தந்தி 28 April 2025 12:31 PM (Updated: 28 April 2025 3:39 PM)
t-max-icont-min-icon

கடந்த முறை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில் இந்த முறை 35-40 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெற்றது.

சென்னை

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.

இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த மாதம் 20-ந்தேதி இந்த தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. கடந்த முறை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில் இந்த முறை 35-40 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் சோதனை ஓட்டமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது.

1 More update

Next Story