லாரியில் மணல் கடத்திய டிரைவர்கள் கைது

கும்மிடிப்பூண்டி அருகே உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
லாரியில் மணல் கடத்திய டிரைவர்கள் கைது
Published on

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டாரஸ் லாரி ஒன்றை அவர்கள் மடக்கி பிடித்தனர்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்ததாக லாரி டிரைவர்களான தடாவை சேர்ந்த இளவரசன் (வயது 36), விருதுநகரை சேர்ந்த கார்த்தி (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com