திருவொற்றியூரில் டிரோன் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு

டிரோன் பறவையின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
டிரோன்
Published on: 

திருவொற்றியூர்,

சென்னை, திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் தனியார் கன்டெய்னர் யார்டில் நேற்று மதியம் டிரோன் ஒன்று விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரித்தனர்.

டிரோன்

விசாரணையில் தமிழ்நாடு ஆளில்லா வான்வெளி வாகன கழகம் சார்பில், தமிழக கடலோர காவல் படை தொடர்பாக எண்ணூர், திருவொற்றியூர் கடல் பகுதிகளில் டிரோன் செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது டிரோன் பறவையின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் கன்டெய்னர் யார்டில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த டிரோனை இயக்கியவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X