

சென்னை,
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நாளை (இன்று) சென்னை வருகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த கூட்டம் குறித்து திட்டமிடுவதற்காகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வந்து சந்தித்தேன். தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. இணக்கமான சூழ்நிலை வரும் என்று நினைக்கிறேன். மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஏற்கனவே விஜயகாந்தை சந்தித்து உள்ளார். நாளைக்கு(இன்று) பியூஸ் கோயலின் வருகை திட்டமிடப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் உள்ள நிகழ்ச்சிகள் திட்டமிடப்படவில்லை. அவர் வந்த பிறகு தான் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வரும் பியூஸ் கோயல், தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிகிறது.