விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்து செவிலியரின் கன்னத்தை கடித்த போதை ஆசாமி

அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த மர்ம ஆசாமி செவிலியரின் கன்னத்தை கடித்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது
விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்து செவிலியரின் கன்னத்தை கடித்த போதை ஆசாமி
Published on

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 டாக்டர்கள் 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஆளில்லாத நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மர்ம ஆசாமி ஒருவன் புகுந்தான்.

அங்கு உள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டுள்ளான். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் தனது உடைகளை அனைத்தையும் கழட்டி போட்டு நிர்வாணமாக அங்கேயே சுற்றி வந்துள்ளான்.

செவியியர் விடுதி அறைக்குள் அத்துமீறி நிர்வாணமாக புகுந்து செவிலியரின் உடையை எடுத்து அணிந்து கொண்டு செவிலியர் விடுதியில் அமர்ந்து கொண்டான்.

அப்போது அந்த அறைக்கு வந்த செவிலியர் ஒருவரை பலவந்தமாக கட்டிபிடித்து கன்னத்தை கடித்துவைத்ததால், செவிலியர் அவனிடம் இருந்து தப்பி, விடுதி அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு வெளியே வந்து கூச்சலிட்டார். செவிலியரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த டிப்டாப் வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அந்த இளைஞர் பாளையம்பட்டி சேர்ந்த மணிகண்டன் என்பதும் கஞ்சா போதையில் வெறிப்பிடித்த நிலையில் செவிலியரின் கன்னத்தை கடித்து மானபங்க படுத்தியது தெரியவந்தது.

காயம்பட்ட அந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com