திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு


திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 10 Jun 2025 10:14 AM IST (Updated: 10 Jun 2025 10:27 AM IST)
t-max-icont-min-icon

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட போலீசார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி விஜயநாராயணம் பகுதியில் உள்ள பரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து, மாணவர்கள் தங்களது அறியாமையால் சிலரின் தவறான நட்பு போன்ற பல காரணங்களால் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். போதைப்பழக்கம் சமுதாயத்திற்கும் உடல் நலத்திற்கும் அழிவை தரக்கூடியது. போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் அது மூளையை மழுங்க செய்து சிந்திக்கும் திறனை அழித்துவிடும். எனவே போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் சூழலை தவிர்த்து ஆரோக்கியமான உடல், சமூகத்தை உருவாக்குவோம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

1 More update

Next Story