'போதையில்லா தமிழ்நாடு' - கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு

7139.387 கி.கி. உலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.
'போதையில்லா தமிழ்நாடு' - கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு
Published on

சென்னை,

'போதையில்லா தமிழ்நாடு' முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப்பொருட்களை அழிக்கும் பணி, தமிழ்நாடு போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று 30.05.2025, சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள 112 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3510.68 கி.கி. உலர் கஞ்சா, 0.860 கி.கி. மெத்தம்பேட்டமைன், 239.600 கி.கி கஞ்சா சாக்லெட் போன்ற போதைப்பொருட்கள் அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுநாள் வரை 355 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 7139.387 கி.கி. உலர் கஞ்சா, 74.150 கி.கி ஹசிஷ், 58 கி.கி. சாராஸ், 1 கி.கி ஹெராயின், 241 கி.கி கஞ்சா சாக்லெட்கள், 0.860 கி.கி. மெத்தம்பேட்டமைன், ஆகியவை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரால் எரிக்கப்பட்டது.

போதைப்பொருள்கள் மற்றும் போதைப்பொருள்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண். 10581 மூலம் மற்றும் வாட்ஸ் -அப் எண். 9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி spnibcid@gmail.com மூலம் பகிருமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com