போதைப்பொருள் விவகாரம் ; டிஜிபி கடும் எச்சரிக்கை

போதைப்பொருள் தடுப்பில் அலட்சியம் காட்டினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிஜிபி கடும் எச்சரிக்கை
Published on: 

சென்னை,

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க 65 போதைப்பொருள் தடுப்புப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்புப் படையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்ட தகவலின்படி,

ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய விசாரணை முகமைகள் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனப்போக்கு காட்டும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி எச்சரித்துள்ளார்.

X