போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு

பாணாவரத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு
Published on

பாணாவரம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மேல்வீராணம், கூத்தம்பாக்கம், போலிப்பாக்கம், சூரை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று கோடை விடுமுறை முடிந்து பள்ளி தாடங்கியது.

கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாணாவரம் போலீசார் சார்பில் போதைபொருள் பழக்க தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில், ''பள்ளி மாணவர்களாகிய நீங்கள் போதை பழக்க வழக்கங்களுக்கு உட்படாமல் நல்லமுறையில் கல்வி பயில வேண்டும். பள்ளிக்கு அருகில் யாராவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்றால் தலைமை ஆசிரியரிடமோ அல்லது காவல் துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.

தலைமுடியினை ஒழுங்காக வெட்டவேண்டும். ஆடைகளை சரியான முறையில் அணியவேண்டும். விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து உயர்நிலைக்கு செல்லவேண்டும்'' என்றார்.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com