போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 4 பேர் கைது

போலீசார் விசாரணை நடத்த முயன்ற போது 4 பேரும் தப்பி ஓட முயன்றுள்ளனர்.
போதை மாத்திரை விற்பனை
Published on: 

திருநெல்வேலி,

போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை மாத்திரை விற்பனை

திருநெல்வேலி மாவட்டம் உத்தமபாண்டியன்குளம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் தங்கப்பராஜா தலைமையிலான போலீசார் உத்தமபாண்டியன்குளம் பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்றனர். அங்கிருந்து அவர்கள் 4 பேரும் தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த விஜய் (வயது 22) மற்றும் ஜானகிராமன் (வயது 19), காஞ்சிபுரத்தை சேர்ந்த ரிசிகேஷ்(வயது 19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com