நடுக்கடலில் ரூ.33 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: கடலோர காவல்படை அதிரடி

கடலோர காவல்படை, டிஆர்ஐ கூட்டு நடவடிக்கையால் ரூ.33 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை,
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு தலைநகர் மாலோவுக்கு இழுவை கப்பல் ஒன்று கடந்த 5-ந்தேதி புறப்பட்டது. இந்த கப்பலில் போதைப்பொருள் இருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கடலோர காவல்படை மற்றும் டிஆர்ஐ (வருவாய் புலனாய்வு இயக்குநரகம்) இணைந்து அந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின்னர் கப்பலில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.33 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் இருந்தது.
போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கப்பலில் இருந்த 11 பேரை கைதுசெய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






