பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

5 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
Published on

சென்னை

தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர். கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், நியூ தின்சுகியா-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப்பெட்டி ஒன்றில் வெள்ளி நிறத்தில் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை யாரும் எடுக்காத நிலையில், ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அருண் குமார் தலைமையில், சி. கோபால கிருஷ்ணன் மற்றும் எம். ராஜேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அதனை கைப்பற்றினர்.

5 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அந்த சூட்கேசில் சட்டவிரோத போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை கைப்பற்றி கூடுதல் விசாரணைக்காக, போதை பொருள் ஒழிப்பு வாரியத்தின் சி.ஐ.டி. பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com