சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மோப்ப நாய் உதவியுடன் இந்த போதைப்பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும் போதைப்பொருளை கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






