மது போதையில் பரோட்டா கேட்டு தகராறு.. சப்ளையருக்கு அரிவாள் வெட்டு

மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சப்ளையரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
மது போதையில் பரோட்டா கேட்டு தகராறு.. சப்ளையருக்கு அரிவாள் வெட்டு
Published on

மதுரை,

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று உணவகத்திற்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் பரோட்டா வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது சப்ளையர் கணபதி, பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். அதற்கு அந்த கும்பல், பரோட்டா உடனடியாக வேண்டும் எனக் கேட்டு கணபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அந்தக் கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கணபதியை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், பலத்த காயமடைந்த சப்ளையர் கணபதியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந் அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com