மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் பஸ் மீது கல் வீசியவர் கைது

மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் பஸ் மீது கல் வீசியவர் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகே மதுபோதையில் பஸ் மீது கல் வீசியவர் கைது
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிரகோடு வழியாக குளச்சல் செல்லும் அரசு பஸ்சில் மதுபோதையில் ஏறியுள்ளார். பின்னர் சாங்கை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் திடீரென்று கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த பஸ் மீது வீசியுள்ளார். அதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com